நாயை சுட்டபோது பெண் பலி - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெருநாய்களை சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
x
தெருநாய்களை சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.பெரம்பலூர் மாவட்டம், எறையூரை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். எறையூர் பஞ்சாயத்தில் தெருநாய்களை சுட்டுக் கொல்வதற்காக நரிக்குறவர் நியமிக்கப்பட்டதாகவும், அவர் நாயை நோக்கி சுட்டதில், தனது தாய் விஜயாவின் காலில் குண்டு பாய்ந்து உயிரிழந்தாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.தாயின் மரணத்திற்கு காரணமான எறையூர் பஞ்சாயத்து தலைவர் குளஞ்சி, துணைத்தலைவர் சின்னதுரை, கவுன்சிலர் ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விஜயா உயிரிழப்புக்கு நாய்களை சுட்டதே காரணம் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும்,தெருநாய்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டதே சட்ட விரோதம் என்றும் தெரிவித்தது.விஜயா மரணத்திற்கு காரணமான மூவரும் சேர்ந்து 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும்,  மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படாததால் தமிழக அரசு 5 லட்ச ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இந்த தொகையை விஜயாவின் வாரிசுகளுக்கு 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டது.



Next Story

மேலும் செய்திகள்