4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
x
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு 8.30 மணி நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி நகர் பகுதியில் 20 செண்டி மீட்டர் பெய்த நிலையில், நுங்கம்பாக்கம் பகுதியில் 18 செண்டி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 13 செண்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்