மீனாட்சி அம்மன் கோயிலில் சப்பர வீதி உலா..சப்பர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், அஷ்டமி சப்பர வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், அஷ்டமி சப்பர வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் சப்பர வாகனத்தில் எழுந்தருளினர். கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, மேலவெளிவீதி வழியாக உலா வந்த மீனாட்சி அம்மனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story