மகன் இறந்த துக்கத்தில் தாயும் தற்கொலை
உடல்நல குறைவால் மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது.
உடல்நல குறைவால் மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது. காரகுப்பத்தை சேர்ந்த பிரேம்குமாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே பிரேம்குமாருக்கு தாயின் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்ய பரிசோதனைகள் நடைபெற்றன. அதில், பிரேம்குமாருக்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரிய வந்தது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆலான பிரேம்குமார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மகனின் முடிவால் மனவேதனை அடைந்த தாய் கஸ்தூரியும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
Next Story