ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் முப்பர் விழா - விழாவை நடனமாடி கொண்டாடிய ஆண்கள்
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் முப்பர் விழா - விழாவை நடனமாடி கொண்டாடிய ஆண்கள்
நீலகிரியில் உள்ள தோடர் இன ஆண்கள் முப்பர் திருவிழாவை பாரம்பரிய முறைப்படி உடையணிந்து, நடனமாடி கொண்டாடினர். முத்தநாடு பகுதியில் வசிக்கும் தோடர் இன மக்கள் தங்களின் குல தெய்வ கோயிலில் முப்பர் திருவிழாவை கொண்டாடினர். ஆண்கள் மட்டுமே விரதம் இருந்து கொண்டாடும் இந்த விழாவில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி இல்லை. பாரம்பரிய உடையணிந்து வந்த ஆண்கள் நடனமாடினர். விழாவில் உருளை கல்லை தூக்கி இளைஞர்கள் வீரத்தை வெளிப்படுத்தினர்.
Next Story