நீட் நுழைவுத் தேர்வு - 2 மாணவிகள் உயிரிழப்பு :குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும்- EPS

நீட் நுழைவுத் தேர்வு - 2 மாணவிகள் உயிரிழப்பு :குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும்- EPS
x
நீட் நுழைவுத் தேர்வு தோல்வி காரணமாக கடந்த வாரம், உயிரிழந்த 2 மாணவிகளின் குடும்பத்திற்கு, தமிழக அரசு, தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம் ஓவேலியை சேர்ந்த மாணவி ஜெயா, 
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாட்டைச் சேர்ந்த மாணவி துளசி ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட செய்தி, துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறியுள்ளார். நீட் நுழைவுத் தேர்வை ரத்துசெய்யும் வரை, நீட் நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியினை அரசு, உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்