காதலியை கத்தியால் குத்திய காதலன்

நாமக்கல் அருகே திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை , காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
நாமக்கல் அருகே திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை , காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரூபேஷ்குமார் துளசி என்பவர் முகநூல் வழியாக காதலித்து வந்தனர். இருவரும் நாமக்கல் மாவட்டம், பிள்ளகளத்தூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று ரூபேஷ் துளசியின் உடலில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். இதில் சம்பவ இடத்திலேயே துளசி உயிரிழந்தார். ரூபேஷை மீட்ட சக தொழிலாளர்கள் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், ரூபேஷ் தம்மை திருமணம் செய்துக் கொள்ளுமாறு பழம், பூக்களுடன் துளசியை சந்தித்தாகவும் அதற்கு துளசி மறுத்ததாக கூறப்படுகிது.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆத்திரமடைந்த  ரூபேஷ், துளசியின் மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் 9 இடங்களில் சரமாரியாக குத்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

Next Story

மேலும் செய்திகள்