தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த சிறப்பு காவல் உதவியாளர் : பணிச் சுமையா, குடும்பத் தகராறா? - போலீசார் விசாரணை
விருதுநகரில் சிறப்பு காவல் ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகரில் சிறப்பு காவல் ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த 48 வயது ராதாகிருஷ்ணன், விருதுநகர் சிவில் சப்ளை சிஐடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பானுமதி, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், ராதாகிருஷ்ணன் வழக்கம் போல் நேற்று பணிக்கு சென்றார். அவர் வெகு நேரமாகியும், வீடு திரும்பாத நிலையில், விருதுநகர் ரயில் நிலையம் அருகே ராதாகிருஷ்ணனின் இருசக்கர வாகனம் நின்றுள்ளது. அதைத் தொடர்ந்து, ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த உடலை மீட்ட ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ராதாகிருஷ்ணன், மன உளைச்சலில் இருந்ததாக கூறுப்படுகிறது. உயிரிழப்புக்கு காரணம், பணிச்சுமையா என்பது உள்ளிட்ட சந்தேகங்கள் எழுந்துள்ளது. ரயில் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story