கோவையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

கோவையில், கணவனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
கோவையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது
x
கோவையில், கணவனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார். 

கோவை கவுண்டம்பாளையம் அடுத்த அம்பேத்கர் வீதியை சேர்ந்த 36 வயது ராஜா, மனைவி ரீனாவுடன் வசித்து வந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். இதனிடையே, கடந்த 23 ஆம் தேதி தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மனைவி ரீனா துடியலூர் போலீசாரிடம் கூறியுள்ளார். தற்கொலை வழக்காக பதிவு செய்த நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராஜாவின் சகோதரி மாலா புகாரளித்தார். இதைத் தொடர்ந்து விசாரித்த போலீசார், மருத்துவ பரிசோதனை மூலம் சந்தேகம் மரணம் என்பதை அறிந்து, தீவிரமாக விசாரித்தனர். அதில், கள்ளக் காதலன் சதீஷுடன் சேர்ந்து மனைவி ரீனா கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்