தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டி - கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில், உத்தரப் பிரதேச அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில், உத்தரப் பிரதேச அணி வெற்றி பெற்றது.
கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், ஹாக்கி இந்தியா சார்பில் தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 27 அணிகள், எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாடின. பின்னர், உத்தரப் பிரதேசம், சண்டிகர் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டிக்கு முன்பாக, ஹாக்கி மைதானத்தில் நிறைவு விழா நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் மெய்யநாதன், கீதாஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து நடைபெற்ற இறுதிப் போட்டியில், 3 - 1 என்ற கோல் கணக்கில் உத்தரப் பிரதேச அணி வெற்றி பெற்று தங்க கோப்பையை தட்டிச் சென்றது. இரண்டாவது இடம் பெற்ற சண்டிகர் அணி, வெள்ளி கோப்பையை கைப்பற்றியது.
Next Story