108 திவ்ய தேச பெருமாள் அருள் பாலிக்கும் கண்காட்சி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் இணைந்து தனியார் நிறுவனம் சார்பில் 108 திவ்விய தேச பெருமாள் அருள் பாலிக்கும் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் இணைந்து தனியார் நிறுவனம் சார்பில் 108 திவ்விய தேச பெருமாள் அருள் பாலிக்கும் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடற்கரை அருகே நேற்று தொடங்கிய 108 திவ்ய தேச பெருமாள் சிலைகளின் கண்காட்சி, ஜனவரி 23ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெருமாள் சிலைகள் காட்சி தரும் ஒவ்வொரு அரங்கின் மேற்பகுதியிலும் திவ்ய தேசங்களின் ஊர், பெருமாள் அவதார கோலத்தின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.
Next Story