கள்ள நோட்டு கொடுத்து ஆடு வாங்கிய கும்பல்

செஞ்சி ஆடு சந்தையில் வியாபாரியிடம் கள்ளநோட்டு கொடுத்து மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
x
செஞ்சி ஆடு சந்தையில் வியாபாரியிடம்  கள்ளநோட்டு கொடுத்து மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வாரச்சந்தையில் ஆடு வியாபாரி காத்தவராயனிடம் ஆடு வாங்க இருவர் வந்துள்ளனர். அந்த இருவரும் ஆடு ஒன்றை 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலை பேசி முதியவர் காத்தவராயனிடம் இருந்து வாங்கியுள்ளனர். அதிகாலையில் பனிமூட்டமாக இருந்த நிலையில் அவர்கள் கொடுத்த பணத்தை காத்தவராயனால் சரிபார்க்க முடியவில்லை. இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து அவர்கள் கொடுத்து சென்ற 23, ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து பார்த்தபோது அவை போலியானது என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காத்தவராயன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இருவரையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்