5 சவரன் நகை தள்ளுபடி , திங்கட்கிழமை முதல் திருப்பி தரப்படும் -அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி வழங்கப்பட்ட நகைகள் வரும் திங்கள்கிழமை முதல் திருப்பித் தரப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி வழங்கப்பட்ட நகைகள் வரும் திங்கள்கிழமை முதல் திருப்பித் தரப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக துறை ரீதியாக அளிக்கப்பட்ட பட்டியல், தணிக்கை துறை சார்பில் சரிபார்க்கும் பணி முடிந்து விட்டதால் நகைகள் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story