தங்கைக்கு தெரியாமல் சொத்தை விற்ற அண்ணன்..! போலி ஆவணத்தால் மோசடி அம்பலம்
போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து 50 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது
போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து 50 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, செனாய் நகர் பகுதியில் வசித்து வருபவர் சண்முகப்பிரியா. இவருடைய சகோதரர் சரவணகுமார். இவர்களுடைய தந்தைக்கு சொந்தமாக ஆவடி பகுதியில் இரண்டாயிரத்து ,400 சதுர அடி காலி நிலம் இருந்துள்ளது.
இந்த இடத்திற்கு தான் மட்டுமே வாரிசு என போலி வாரிசு சான்றிதழ் தயார் செய்து சரவணகுமார் சொத்தை விற்றுள்ளார். இது தொடர்பாக அவரது சகோதரி சண்முகப்ரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சரவணகுமார் மற்றும் அவரது மனைவியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் 50 லட்ச ரூபாய்க்கு நிலத்தை விற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story