தீயில் கருகிய 27 சவரன் தங்க நகைகள்.. பணமும் பறிபோனதால் தம்பதி கண்ணீர்...

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து கருகியதை கண்ட தம்பதி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
x
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து கருகியதை கண்ட தம்பதி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கேட் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். தனது மனைவி வாணி மற்றும் குழந்தைகளுடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து புகைமூட்டம் கிளம்பியதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்ததோடு தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் எரிந்த தீயை அணைத்துள்ளனர். தகவல் அறிந்து தனது வீட்டிற்கு வந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி வாணி ஆகியோர் வீட்டில் எரிந்து கருகிய நிலையில் இருந்த ஒரு லட்சத்தி 30 ஆயிரம் பணம் மற்றும் 27 சவரன் தங்க நகைகளை கண்டு கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்