" எனக்கு பிறந்தது என்ன குழந்தை ..? "குழப்பத்தில் பெற்றோர்..!

தங்களுக்கு பிறந்தது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்ற குழப்பத்தை பெற்றோர்க்கு உண்டாக்கிய மருத்துவர்கள்
x
தங்களுக்கு பிறந்தது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்ற குழப்பத்தை மருத்துவர்கள் உண்டாக்கியுள்ளதாக சென்னை திருவொற்றியூரை சேர்ந்த தம்பதி குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் கல்யாண செட்டி பகுதியை சேர்ந்த ரகுநாத் புஷ்பா தம்பதிக்கு  அங்குள்ள மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் அக்டோபர் 18 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்வதற்காக திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு பெற்றோர்கள் சென்ற போது, பதிவேட்டில் பெண் குழந்தை என இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மருத்துவமனை பதிவேட்டில் ஆண் குழந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பிறப்புச் சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கம் கேட்டால் நகராட்சி அதிகாரிகளும், மருத்துவமனை நிர்வாகமும் சரியாக அளிக்காததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்  உறவினர்களோடு மருத்துவமனையின் முன்பு தரையில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்