தலைமுடி சிகிச்சை மையம் அமைப்பதாக மோசடி - ரூபாய் 15 இலட்சத்தை அபேஸ் செய்த கும்பல்

தலைமுடி சிகிச்சை மையம் அமைத்து தருவதாக கூறி 15 லட்ச ரூபாய் பணத்தை அபேஸ் செய்த டாக்டர்
x
தலைமுடி சிகிச்சை மையம் அமைத்து தருவதாக கூறி 15 லட்ச ரூபாய் பணத்தை அபேஸ் செய்த டாக்டர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முஹம்மது ஹாலீது. இவர் தனது தலைமுடி சிகிச்சைக்காக கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் சிகிச்சை மையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெங்களூரை சேர்ந்த டாக்டர் ஹோகன் மற்றும் ராஜாராம், அஸ்ரத் தேவராஜ், நந்தகுமார், ஷெல்லிலெதர் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் தலைஞாயிறு பகுதியில் முடி சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் என்றும் அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறவே, அதை நம்பி முகமது ஹாலிது 15 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என பல்வேறு காரணங்களை கூறி பணத்தை ஏமாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து முகமது ஹாலிது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்