வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்.."நீரில் நடந்து செல்ல கஷ்டமாக உள்ளது" பொதுமக்கள் கோரிக்கை
விருத்தாசலம் அருகே பள்ளி மாணவ, மாணவிகள், ஊர்மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே பள்ளி மாணவ, மாணவிகள், ஊர்மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.
மேமாத்தூரில் பருவமழை காலத்தில் மணிமுக்தாறு தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், கிராமமக்கள், விவசாயிகள், ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். முழங்கால் அளவுக்கு மேல் பெருக்கெடுத்து ஓடும் நீரை தினமும் கடந்து செல்ல சிரமமாக இருப்பதாக கூறும் மாணவர்கள், போதிய பேருந்து வசதியும் இல்லை என கவலை கொள்கிறார்கள். தங்களின் நலன் கருதி, மணிமுக்தாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story