சண்டை போட்டுக்கொண்ட 2 மயில்கள் , ஓடி சென்று உதவிய சிறுவன்
மயிலுக்கு போர்வை தந்த பேகன் போல, காயம் அடைந்த மயிலுக்கு ஓடோடிச் சென்று சிறுவன் உதவிய நெகிழ்ச்சி சம்பவம்
மயிலுக்கு போர்வை தந்த பேகன் போல, காயம் அடைந்த மயிலுக்கு ஓடோடிச் சென்று சிறுவன் உதவிய நெகிழ்ச்சி சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது. அண்ணாமடுவு பகுதியில் விவசாய நிலத்தில் 2 மயில்கள் ஒன்றுடன் ஒன்று மூர்க்கமாக சண்டையிட்டுக் கொண்டதில், ஒரு மயிலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த சிறுவன் பாஸ்கர், காயம் அடைந்த மயிலை லாவகமாக பிடித்து முதலுதவி செய்து பெற்றோரின் உதவியுடன் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். சிறுவனின் செயலை வனத்துறையினரும் அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Next Story