நீட் தேர்வு தோல்வியால் , மாணவி உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நீட் தேர்வு தோல்வியால் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நீட் தேர்வு தோல்வியால் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கூடலூர் அருகே ஓவேலி பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் - புஷ்பா தம்பதியின் 2 ஆவது மகள் ஜெயா. சிறுவயதில் இருந்தே மருத்துவ கனவுடன் இருந்த ஜெயா கடந்த வருடம் நீட் தேர்வு எழுதி அதில் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் அளித்த ஊக்கத்தின் பேரில் இந்த வருடமும் நீட் தேர்வு எழுதிய அவர் அதிலும் தோல்வியடைந்தார். இதன் காரணமாக தொடர் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, உதகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்தார். இதன் பின்னர், அவர் வீட்டில் கிடைத்த கடிதத்தில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்காக பெற்றோர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் மாணவி ஜெயா எழுதி வைத்துள்ளார்.
Next Story