"வகுப்புகள், கழிவறைகள் சுத்தம் செய்யும் பணி" - "மாணவர்களை ஈடுபடுத்த கூடாது"
பள்ளி வகுப்பறைகளையும், கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம், வகுப்பறையை சுத்தம் செய்யும் படி, வகுப்பாசிரியர், ஒருவர் சிவநிதி என்ற மாணவருக்கு, உத்தரவு பிறப்பித்துள்ளார். சுத்தம் செய்யும் போது, மேஜை ஒன்று சிவநிதியின் காலில் விழுந்து காயம் ஏற்பட்டது.
இது குறித்து அவரது தந்தை ஆதி சிவன், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். இந்த புகாரை விசாரித்த ஆணையம், சுத்தம் செய்ய போதுமான ஊழியர்களை நியமிக்காததற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரையோ, வகுப்பாசிரியரையோ குறை கூற முடியாது என கூறினார். பள்ளி நிர்வகம் தான் காரணம் என கூறி, பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை கண்காணிக்கும்படி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்த வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Next Story