2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்பு - டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு
29 ஆண்டுக்கு முன் காணாமல் போன 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் மீட்கப்பட்டதற்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காணமல் போன கோவில் சிலைகள் 29 ஆண்டுகளுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு, கடந்த 1992 ஆம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம் சன்னாசி பனங்குடி கிராமத்தில் தாளரணேசுவரர் கோவிலிலிருந்து சிலைகள் காணாமல் போனது என்றார். 2000 ஆண்டுகள் பழமையான இந்த சிலைகள் பஞ்சலோகத்தாலானது என்றும், அதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டனர் என கூறி பாராட்டுக்களை தெரிவித்தார்.
Next Story