திருச்சி மாவட்டத்தில் அரசு சித்த மருத்துவ கல்லூரி - அமைச்சர் கே.என். நேரு உறுதி

திருச்சி மாவட்டத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு, வெளியிடப்படும் - அமைச்சர் கே.என். நேரு
திருச்சி மாவட்டத்தில் அரசு சித்த மருத்துவ கல்லூரி - அமைச்சர் கே.என். நேரு உறுதி
x
திருச்சி மாவட்டத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிடப்படும் என, அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நோய்களுக்கு நிரந்தர தீர்வாக சித்த மருத்துவம் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும், திருச்சியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிடப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்