ஜெயலலிதா மரணம் - மீண்டும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் தொடங்க உள்ளது.
x
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் தொடங்க உள்ளது. 

ஆறுமுகசாமி ஆணையம் தொடரலாம் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழு அமைக்க அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் தொடங்க உள்ளது. விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே உள்பட நான்கு பேருக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. டைப்பிஸ்ட், எஸ்ஓ, நீதிபதிக்கான பாதுகாலவர் உள்பட பலரையும் மீண்டும் பணி அமர்ந்து ஆணையம் கோரவுள்ளது.  பத்திரிக்கையாளர்கள், எய்ம்ஸ் மருத்துவ குழு உள்ளிட்டோரும் அமரும் வகையில் 712 சதுர அடியில் புதிதாக நீதிமன்ற வளாகம் அமைக்கும் பணி இறுதி நிலையை எட்டியுள்ளது. மருத்துவ குழு அமைக்கபட்டவுடன், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்