கல்வித்தகுதிகள் வரிசைப்படி இல்லாவிட்டால் பணிநியமனமோ பதவி உயர்வோ கோர முடியாது - உயர்நீதிமன்றம்
ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதிகளை வரிசைப்படி பெறாதவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஜோசப் இருதயராஜ் என்பவரின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, பள்ளி நிர்வாகம், பள்ளி கல்வி இணை இயக்குனருக்கு விண்ணப்பித்தது. ஆனால், 10ம் வகுப்பு முடித்த ஜோசப் இருதயராஜ், தொலைதூர கல்வி மூலம் பட்டப்படிப்பை முடித்து, பி.எட், படிப்பை முடித்த பின், ப்ளஸ் 2 படிப்பை முடித்திருப்பதாக கூறி, அவரது நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க பள்ளி கல்வி இணை இயக்குனர் மறுத்து உத்தரவிட்டார். இந்தநிலையில் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கல்வி அதிகாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒருவர் எத்தனை கல்வித்தகுதிகளை பெற்றாலும், அவை வரிசைப்படி இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர் பணிநியமனமோ, பதவி உயர்வோ கோர முடியாது எனக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
Next Story