"ரயில் நிலையங்களில் சிறப்பு பரிசோதனை மையங்கள்" - மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தகவல்
நெல்லை மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று முன்னெச்சரிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
நெல்லை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கொரோனா பரிசோதனை முகாமில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நெல்லை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
Next Story