தமிழக மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர் - உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர், தாயகம் திரும்பினர்.
தமிழக மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர் - உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு
x
நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்டோபர் 13ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 23 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ,இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.  விசாரணைக்கு பின் அவர்கள், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டெடுக்க வேண்டுமென, மீனவர்களின் உறவினர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் 23 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றம் கடந்த 14ஆம் தேதி விடுவித்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து 18 மீனவர்கள், சனிக்கிழமையன்று, விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து சொந்த ஊரான நாகை திரும்பினார். நாகை துறைமுகம் வந்து சேர்ந்த மீனவர்களை கண்ட  உறவினர்கள், கண்ணீர் மல்க அவர்களை வரவேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்