திமுக எம்.பி. ரமேஷ் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு
கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்.பி. ரமேஷ் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு
கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.இந்நிலையில், சிபிசிஐடி முறையாக விசாரிக்காததால், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோவிந்தராஜூவின் மகன் செந்தில்வேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறுவதாகவும், புதிய விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தரராஜன் நியமிக்கப்பட உள்ளதாகவும், சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் வாதிட்டார்.இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி நிர்மல்குமார், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி புதிய விசாரணை அதிகாரி, தன் விசாரணையை தொடரலாம் எனவும், அதை விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. கண்காணிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
Next Story