அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்
x
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் மகா தீபா நிகழ்வை ஒட்டி, விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். இதையடுத்து மாலை 6 மணிக்கு, 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. செப்பினால் செய்யப்பட்ட, 175 கிலோ எடை கொண்ட தீப கொப்பரை, 2 ஆயிரத்து 500 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த தீப கொப்பரையில், 7 ஆயிரத்து 150 கிலோ நெய், 22 கிலோ கற்பூரம், ஆயிரத்து 200 மீட்டர் காடா துணி கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலை மீது ஏற்றப்படும் நிலையில், அப்போது சேகரிக்கப்படும் தீப மை, ஆருத்ரா தரிசனத்தன்று சுவாமிக்கு வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த நிகழ்வில் 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்