"ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செய்தோம்" - எடப்பாடி பழனிசாமி
சென்னை மயிலாப்பூர் பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு சரியாக செயல்படாததே இதற்கும் காரணம் என்றும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குடும்பத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அதிமுக அரசு சரியாக செயல்படுத்தியதாக மத்திய அரசே பாராட்டு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story