"கொரோனாவில் பலியானோர் குடும்பத்துக்கு விரைந்து நிவாரணம்"

கொரோனா பேரிடர் அறிவித்து 500 நாட்கள் கடந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விஜயகோபால் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
கொரோனாவில் பலியானோர் குடும்பத்துக்கு விரைந்து நிவாரணம்
x
"கொரோனாவில் பலியானோர் குடும்பத்துக்கு விரைந்து நிவாரணம்"
 
கொரோனா பேரிடர் அறிவித்து 500 நாட்கள் கடந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விஜயகோபால்  உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வாதிட்டது.அப்போது, மாநில அரசு எவ்வளவு இழப்பீடு வழங்க உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவது என பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு கூறியது.மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில், 36 ஆயிரத்து 220 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியது.இதைத் தொடர்ந்து, கூடுதல் இழப்பீடு வழங்க தடையில்லை என்ற நீதிமன்றம், இழப்பீட்டை விரைந்து வழங்க தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவிட்டது. வழக்கு அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்