மீனவ கிராமத்தில் நடந்த தாக்குதல் - சிகிச்சை பலனின்றி மீனவர் உயிரிழப்பு
கன்னியாகுமரி அருகே மீனவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீனவ கிராமத்தில் நடந்த தாக்குதல் - சிகிச்சை பலனின்றி மீனவர் உயிரிழப்பு
கன்னியாகுமரி அருகே மீனவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் புரூனோ. 52 வயதான இவர், சாஸ்தான்கரை பகுதியில் உள்ள தன் சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே குறும்பனை பகுதியில் உள்ள மீனவ கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த மாதம் அங்கு நடந்த திருமணத்திற்கு தனக்கு அழைப்பிதழ் வரவில்லை என கூறி அதே பகுதியை சேர்ந்த அந்தோணி என்பவரிடம் புரூனோ தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் புரூனோவை அந்தோணி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2ஆம் தேதி மீண்டும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட புரூனோவை அந்தோணியின் உறவினர்கள் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஒருவர் கைதான நிலையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story