திருமணம் செய்ய மறுத்த இளைஞர் - தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
ஆலங்குளம் அருகே 10 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞரின் வீட்டின் முன் இரவில் தர்ணா போராட்டம் நடத்திய இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் ஐந்தாம்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்ற பெண் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்பவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் தனிமையில் சந்திக்கும் பொழுது செல்வமணியின் உறவினர் நேரில் பார்த்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் இருவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தெரிய வரவும் கடையம் காவல்நிலையம் வரை சென்றுள்ளது. அங்கு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சதீஷ் செல்வமணியை பார்த்து இவர் யார் என்று தெரியாது என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமணி தன்னுடன் சதீஷ் பழகியதற்கான ஆதாரங்களை போலீசாரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திலிருந்து வீடு திரும்பும் போது சதீஷின் வீட்டிற்கு சென்று செல்வமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார், செல்வமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்து முறைப்படி புகார் மனு எழுதித்தர செய்தனர்.
Next Story