பெண் ஐ.பி.எஸ்.-க்கு பாலியல் தொல்லை வழக்கு - விசாரணை 8ஆம் தேதி தள்ளி வைப்பு
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 8ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையானது விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முன்னாள் டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி. ஆகியோர் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணையானது வரும் 8ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் இருவரும் கண்டிப்பாக நேரில் ஆஜராகுமாறு நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.
Next Story