வீடுகளுக்குள் புகுந்து பொருட்கள் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பூந்தமல்லியில் வீடுகளுக்குள் சென்று பொருட்களை திருடிச் சென்றவரின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
ராஜா அக்ரகாரம் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போவதாக புகார்கள் வந்தன. இதன்பேரில் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வரும் 2 பேர் சர்வசாதாரணமாக பொருட்களை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பவர்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story