தாதா சாகேப் விருதினை பெற்ற நடிகர் ரஜினியை சந்தித்த முக்கிய பிரமுகர்கள்

விருது பெற நடிகர் ரஜினி டெல்லி சென்ற போது நடந்த சில முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது, இந்த தொகுப்பு....
தாதா சாகேப் விருதினை பெற்ற நடிகர் ரஜினியை சந்தித்த முக்கிய பிரமுகர்கள்
x
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய சமயம்...

ரஜினியின் அரசியலை தமிழகம் உற்றுநோக்கிக்கொண்டிருக்க, 
கட்சி தொடங்கி அரசியலுக்கு வரப்போவதில்லை என உடல்நிலையை காரணம்காட்டி அறிவிப்பு வெளியிட்டார் ரஜினி.  

பின்னர் தேர்தலுக்கு குறுகிய நாட்கள்கே இருந்த சமயத்தில், இந்திய திரையுலகில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

தேர்தல் முடிவடைந்தது. தற்போது காட்சிகள் மாறி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான தேதியும் வந்தது. 

விருதை பெற 24ம் தேதி இரவு டெல்லி புறப்பட்டார் ரஜினிகாந்த். 

அங்கு நட்சத்திர விடுதியில் தங்கியிருக்க, மத்திய அமைச்சர்கள் சிலவர் ரஜினியை சந்தித்து கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. 

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது.

மறுநாள் விருது வழங்கும் மேடையில் பேசிய குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு, ரஜினியை தலைவர் என சிலாகித்து பேச்சை தொடங்கினார். 

ரஜினியின் ஈடு இணையற்ற ஸ்டைல், நடிப்புத் திறமைகள், இந்திய சினிமாத்துறைக்கு பதிய பரிமாணத்தை அளித்ததாக புகழ்ந்தார்.

தொடர்ந்து அன்று மாலையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார் ரஜினிகாந்த்

இதனிடையே உத்தரபிரதேசத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, தொலைபேசி வாயிலாக ரஜினிகாந்தை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இப்படி டெல்லியில் ரஜினிகாந்த் இருந்த இரு நாட்கள், அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்