2 மயக்க ஊசிகள் செலுத்தியும் புலி தப்பிப்பு - கும்கி யானைகள் உதவியோடு தேடும் பணி தீவிரம்

நீலகிரியில் போக்கு காட்டிவரும் ஆட்கொல்லி புலி, 2 மயக்க ஊசிகள் செலுத்தியும் பிடிபடாமல் தப்பி ஓடி உள்ளது.
x
கூடலூர் சுற்றுவட்டாரப் பகுயில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளை வேட்டையாடி வரும் டி-23 புலியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், வனத்துறையினரிடம் சிக்காமல் அந்த ஆட்கொல்லி புலி போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில், கூடலூர் - முதுமலை வனப்பகுதியில், அந்த புலி செல்வதை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து உள்ளனர். தகவலறிந்து அங்கு சென்ற கால்நடை மருத்துவர்கள், புலியின் மீது இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தி உள்ளனர். இருப்பினும், அந்த புலி தப்பி ஓடி அடர்ந்த வனப்பகுதிக்குள் பதுங்கிக் கொண்டு உள்ளது. இதனால், 2 கும்கி யானைகளின் உதவியோடு, இரவிலும் வனத்துறையினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 20 நாட்களுக்கு மேலாகியும் புலியை பிடிக்க முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்