இரு மகன்களை கொலை செய்த தந்தை - கொலை தொடர்பாக போலீசார் விசாரணை
மனைவி மீது உள்ள கோபத்தில் இரு மகன்களை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆவடியை அடுத்து கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன், இவருக்கும் மனைவிக்கும் இடையே பிரச்சனை காரணமாக பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனது இரு மகன்களையும் உறவினர் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கணேசன் கூறி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அப்போது வெள்ளனூர் ஏரியில் இரு உடல்கள் மிதந்து கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஏரிக்கு அருகில் கையில் வெட்டு காயத்தோடு கணேசனை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது இரு மகன்களை தன்னிடம் இருந்து மனைவி பிரித்து விடுவார் என்ற அச்சத்தால் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயற்ச்சித்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story