ஜாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் - கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்ட முதியவர்

ஜாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் - கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்ட முதியவர்
ஜாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் - கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்ட முதியவர்
x
ஜாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் - கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்ட முதியவர் 

ஜாதி சான்றிதழ் கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டபோது 83-வயது முதியவர், திடீரென கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.திருத்தணியில், பழங்குடி கொண்டா  ரெட்டீஸ் மலைஜாதி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதி இல்லை, உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என கூறியதால், போலீசாருக்கும் கொண்டா ரெட்டீஸ் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போராட்டத்திற்கு வந்த 83 வயதான பெரியசாமி என்ற பெரியவர், திடீரென கையில் இருந்த கத்தியால், காவல்துறை அதிகாரிகள் கண்முன்னே, கழுத்தை அறுத்துக் கொண்டார். அவரை மீட்ட போலீசார், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்