மலைச்சாலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் - சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை

கொடைக்கானல் மலைச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலைச்சாலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் - சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை
x
கொடைக்கான‌ல்-வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையிலுள்ள வாழைகிரி வனப்பகுதிக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் விறகு எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது ஒருவர் சடலமாக புதர்களின் நடுவே  கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பெண்கள் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து கைகள் கட்டப்பட்ட நிலையிலிருந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். பின்னர்  உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்