உயர் மின் கோபுரத்தில் ஏறி, விவசாயி தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் போராட்டம்

இழப்பீடு வழங்காததால் உயர் மின் கோபுரத்தில் ஏறி, விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர் மின் கோபுரத்தில் ஏறி, விவசாயி தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் போராட்டம்
x
விழுப்புரம் மாவட்டம், கலிங்கமலை பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவருக்கு சொந்தமான 50 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து விவசாயம் செய்ய முடியாமல் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மணி, உரிய இழப்பீடு வழங்கக் கோரி தனியார் ஒப்பந்ததாரரிடம் பலமுறை முறையிட்டும் பணம் கிடைக்கவில்லை. மனஉளைச்சல் அடைந்த அவர், 200 அடி  உயர்மின்கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த மேல்மலையனூர் தீயணைப்புத்துறையினர் 2 மணிநேரம் போராடி மணியின் உடலை கீழே இறக்கிக் கொண்டு வந்தனர். இந்த இறப்புக்கு நியாயம்கோரி அவரது உறவினர்கள், செஞ்சி வேலூர் சாலையில் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்துச் சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்