குடும்ப தகராறில் தந்தையின் விபரீத முடிவு: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த‌ தந்தை

கரூரில் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை உயிர் பிழைத்த நிலையில், 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
குடும்ப தகராறில் தந்தையின் விபரீத முடிவு: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த‌ தந்தை
x
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆதனூரை சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டரான முருகேசன் பழனியம்மாள் தம்பதிக்கு 4 மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு குழந்தைகள் இருந்தன. இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த‌தாக தெரிகிறது. சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றியதில் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு 100 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், சிறு காயங்களுடன் தண்ணீரில் த‌த்தளித்த முருகேசன் தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து தோகை மலை போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்