"நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை"

காவிரி ஆற்றில் கழிவு நீர் வெளியேற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க, 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை
x
"நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை" 

காவிரி ஆற்றில் கழிவு நீர் வெளியேற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க, 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு அமைத்துள்ள குழுக்கள், சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் காவிரி மற்றும் அதன் உப நதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிந்து வருவதாக கூறியுள்ளார்.சென்னை ஐஐடி நிபுணர் குழு கூறியுள்ள, மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை உள்ள காவிரி ஆற்றில்,  பல்வேறு இடங்களில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர்களால், இன்று நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.காவிரி ஆற்றில் கலக்கும் உயர் உலோகங்கள், பூச்சிக்கொல்லி, மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றால்,காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு,  ஐஐடி நிபுணர் குழு மற்றும் பல்வேறு வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.குழுக்களின் ஆய்வறிக்கையின்படி, காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தொடந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்