"புலியை கொல்ல வேண்டாம்" - நீதிமன்றம்
நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என தமிழக வனத்துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என தமிழக வனத்துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி சுற்றுவட்டாரத்தில் 4பேரை கொன்ற புலியை வேட்டையாடி பிடிக்க தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து இந்திய கால்நடைகளுக்கான மக்கள் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், குறிப்பிட்ட புலி, ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பான உத்தரவில் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணையில், ஆட்கொல்லி என அறிவிக்கப்பட்ட புலியை 144 தடை உத்தரவை பிறப்பித்து, அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு புலியை கொல்லும் திட்டம் இல்லை என்றும், அதை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அச்சத்தை ஏற்படுத்திய புலி, ஆட்கொல்லி புலியாக இல்லாமல் கூட இருக்கலாம் என்பதால், அதை உடனடியாக கொல்ல முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், புலியின் நடவடிக்கை கண்காணித்து, அதனை பிடித்ததும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென கூறினார். மேலும் புலியை பிடிக்கும் போது மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
Next Story