"அக்.5 - தனிப்பெருங்கருணை நாள்"- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 5ஆம் தேதி, தனிப்பெரும் கருணை நாளாக அனுசரிக்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
x
வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 5ஆம் தேதி, தனிப்பெரும் கருணை நாளாக அனுசரிக்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார், சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவியதாகவும், வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பியதாகவும் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என, வள்ளலார் பாடியதை மேற்கோள் காட்டிய ஸ்டாலின், மக்களின் பசியை போக்க அவர் ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாமல் எரிவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5ஆம் தேதி, ஆண்டுதோறும் தனிப்பெரும் கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என, முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்