"ஐபோன், வேலை செய்ய ரோபோ"; நகைப்பை ஏற்படுத்தும் தேர்தல் வாக்குறுதிகள்-சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகள்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில், சமூக ரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் அளித்துள்ள நிறைவேற்ற முடியாத நகைச்சுவையான வாக்குறுதிகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில், சமூக ரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் அளித்துள்ள நிறைவேற்ற முடியாத நகைச்சுவையான வாக்குறுதிகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் கட்டனேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜகனி என்பவர் அளித்துள்ள வாக்குறுதிகள் இணைய தளங்களில் வைரலாகியுள்ளன. அனைவருக்கும் ஐபோன், நீச்சல் குள வசதியுடன் 3 மாடி வீடு, அனைவரது வங்கிக் கணக்கிலும் ஒரு கோடி ரூபாய் டெபாசிட், இல்லத்தரசிகளுக்கு வேலை செய்ய ரோபோ, திருமணம் ஆகப்போகும் பெண்களுக்கு இலவசமாய் 100 சவரன் தங்க நகைகள், நிலவுக்கு செல்ல 100 நாள் பயணச்சீட்டு, தொகுதி குளிர்ச்சியாக இருக்க 300 அடி உயரத்தில் செயற்கை பனிமலை என்று பல தேர்தல் வாக்குறுதிகளை ராஜ கனி அள்ளி வீசியுள்ளார். உணவகத்தில் சப்ளையராகப் பணியாற்றும் ராஜகனிக்கு என்ன சின்னம் ஒதுக்கி உள்ளார்கள் என்று கூடத் தெரியாது என்கின்றனர் அவரது பேரன்மார்கள். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து விட்டு பின்பு காணாமல் போகும் அரசியல் வாதிகளுக்கு பாடம் புகட்டவே, கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த தேர்தல் வாக்குறுதிகளை அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்