ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்பு தீவிரம் - பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது
ஊரக உள்ளாட்சி தேர்தலில், நாளை மறுதினம் முதல் கட்ட வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், நாளை மறுதினம் முதல் கட்ட வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 79ஆயிரத்து 433 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 9 மாவட்டங்களில் உள்ள 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,ஆயிரத்து 577 கிராம ஊராட்சி தலைவர்கள், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தீவரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை 5 மணியோடு முதல் கட்ட தேர்தல் பிரசாரம் முடிகிறது. அதன் பிறகு வெளியூரை சேர்ந்த நபர்கள் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளை மறுதினம் 7ஆயிரத்து 921 மையங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
Next Story