தமிழகத்தில் மேலும் 1,531 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 68 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 582 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 16 ஆயிரத்து 972 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்து கோவையில் 158 பேருக்கும், செங்கல்பட்டில் 105 பேருக்கும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சையில் 93 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஈரோட்டில் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
தஞ்சையில் 93 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஈரோட்டில் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
Next Story