பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்த சிலைகள் - ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்காக சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்காக சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக திருவனந்தபுரம் ஆன பிறகு, நவராத்திரி விழாவிற்கு பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவிதாங்கூர் மன்னரின் உடைவாளும், சரஸ்வதி, முருகன், நங்கை உள்ளிட்ட சாமி சிலைகளும் ஆண்டுதோறும் பவனியாக எடுத்து செல்வது வழக்கம். இதை முன்னிட்டு இந்த ஆண்டும் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் கொரோனா விதிமுறைகள் காரணமாக விழா எளிமையாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கேரல அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், சிவன் குட்டி, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், மற்றும் கேரள சட்டமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். வழக்கமாக தமிழக மற்றும் கேரள போலீசார் சாமி சிலைகளுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கும் நிலையில், இந்த ஆண்டு தமிழக காவல்துறையினர் மட்டும் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
Next Story