திருமணமான 3 மாதத்தில் கணவர் உயிரிழந்த விவகாரம் - ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே திருமணமான மூன்று மாதத்தில் கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே திருமணமான மூன்று மாதத்தில் கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போரம் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை - நந்தினி ஆகியோருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பாண்டித்துரை மாயமான நிலையில், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக, மனைவி நந்தினியிடம் ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குடும்ப தகராறு காரணமாக கணவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story